கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரினால் குறித்த விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்கமானது வடக்கு நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அதிக மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் சீரற்ற காலநிலை நிலவலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை பாடசாலைகள் நடைபெறாது என மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1