பாலிவுட் நடிகர் இஷான் கட்டார் தற்போது நடிகை அனன்யா பாண்டேவே காதலித்து வருகிறாராம்.
பாலிவுட் நடிகரான ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டாரும் நடிகர் ஆவார். தடக் படத்தில் நடித்தபோது அவருக்கும், ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இந்த காதலுக்கு ஜான்வியின் தந்தை போனி கபூர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறப்பட்டது. எனினும், ஜான்வியும், இஷானும் பிரிந்துவிட்டனர்.
ஜான்வியை பிரிந்த இஷான் தற்போது நடிகை அனன்யா பாண்டேவை காதலிக்கிறாராம். அனன்யாவின் பெற்றோர், தங்கை ரைசாவுக்கும் இஷான் நெருக்கமாகிவிட்டாராம்.
இது குறித்து அனன்யாவுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது,
அனன்யாவும், இஷானும் காதலிப்பது உண்மை தான். அவர்கள் ரொம்ப சீரியஸாக இருக்கிறார்கள். இருப்பினும் தாங்கள் காதலிப்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. பாலிவுட்டில் இருக்கும் அனைவருக்கும் அவர்களின் காதல் பற்றி தெரியும் என்றார்கள்.
முன்னதாக போதை வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யனின் வாட்ஸ்ஆப் சாட்டில் அனன்யாவின் பெயர் இருந்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அனன்யாவை தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்பொழுது இஷான் தான் அனன்யாவுக்கு ஆறுதலாக இருந்தாராம்.
விஜய் தேவரகொண்டா ஜோடியாக லைகர் படத்தில் நடித்து வருகிறார் அனன்யா.