கொழும்பு 12 இல் வசிக்கும் மூன்று சிறுமிகள் நேற்று (08) காணாமல் போயுள்ளதாக கெசல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை 8:00 மணியளவில் மூன்று சிறுமிகளும் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.
காணாமல் போனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மற்றும் உறவினரான இன்னொரு சிறுமி என்றும், அவர்கள் மூவரும் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று சிறுமிகளும் நேற்று (08) காலை கொழும்பு விஹார மகாதேவி பூங்கா மற்றும் காலி முகத்திடல் மைதானத்தில் சுற்றித் திரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1