26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

மசூதியில் சிகிச்சையளிக்கப்பட்ட சிறுமி மரணம்: வைத்தியசாலைக்கு அனுப்பாத இமாம் கைது!

கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சதார். இவரது 11 வயது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மகளை அங்குள்ள மசூதிக்கு அப்துல் சதார் அழைத்து சென்றார். மசூதியின் இமாம் முகமது உவைஸ், சிறுமிக்கு புனித நீரை கொடுத்து குடிக்க செய்துள்ளார்.

“புனிதநீர் குடித்திருப்பதால் சிறுமிக்கு குணமாகிவிடும். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டாம்” என்று இமாம் கூறியுள்ளார். இதை நம்பிய அப்துல் சதார், மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. இதன் காரணமாக சிறுமி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அப்துல் சதாரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, சிறுமியின் தந்தை அப்துல் சதார், இமாம் முகமது உவைஸ் ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து கண்ணூர் மாவட்ட எஸ்.பி. இளங்கோ கூறும்போது, “மதநம்பிக்கை காரணமாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். இதன்காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இமாம் முகமது உவைஸின் தவறான வழிநடத்துதலால் ஏற்கெனவே 4 பேர் மருத்துவ சிகிச்சை இன்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment