சதொச நிறுவனத்திடம் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
சீனி மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது பிற பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டுமென நடைமுறையில் இருந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நுகர்வோர் இனி எத்தனை பொருட்களை வேண்டுமானாலும் கொள்வனவு செய்ய முடியும் என்று கூறிய அமைச்சர், தான் எந்த வகையிலும் நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தை மீறவில்லை என்றும் கூறினார்.
குறிப்பிட்ட முறையில் சில கொள்வனவுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த நடவடிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.