நாட்டில் இன்று (6) 617 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,44,630 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 339 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர்.இதுவரை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,14,912 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் நேற்று (5) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (6) உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 6 பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1