26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

முத்துராஜவெல சதுப்பு நிலம் சுவீகரிப்பிற்கு எதிராக கர்தினால் மனு!

நீர்கொழும்பு, வத்தளை மற்றும் ஜா-எல பிரதேசங்களில் முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் 3,000 ஏக்கர் காணியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேச செயலாளர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 07 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் முத்துராஜவெல சதுப்பு நிலத்திற்கு சொந்தமான 3000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை சுவீகரிக்க நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அவர்களின் குடியிருப்பும் கடும் சவாலுக்கு உள்ளாகும் என கர்தினால் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் குறித்த காணியை சுவீகரிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாகாத ரிட் உத்தரவை பிறப்பிக்குமாறு கர்தினால் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment