தேர்தலுக்கு முன்னர் வழங்கிய ஒரு உறுதிமொழியையும் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா, அரசாங்கம் நாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகுவதற்கு வாக்களிக்கும்போது, அவர் உறுதியான முடிவுகளை எடுப்பார் என்றும் வலுவான தலைவர் என்றும் பொதுமக்கள் கருதியதாகவும், விலைவாசிகளைக் கட்டுப்படுத்தி மோசடி செய்பவர்களை அவர் பிடிப்பார் என நம்பியதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், ஆட்சியை நடத்துவதற்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கும் தகுதியற்றவர் என்பதை இன்று நிரூபித்துள்ளதாக டில்வின் சில்வாதெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1