பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகண்டா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பாலகிருஷ்ணா. இதனை, மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘க்ராக்’ படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார்.
பாலகிருஷ்ணா – கோபிசந்த் மாலினேனி படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான ‘க்ராக்’ படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Team #NBK107 welcomes the highly talented and gorgeous @shrutihaasan on board to play the leading lady opposite #NandamuriBalakrishna Garu 😎#HappyDiwali 💥@megopichand @MusicThaman ❤️🔥 pic.twitter.com/kjodDXaePk
— Mythri Movie Makers (@MythriOfficial) November 4, 2021