நாட்டின் எந்த ஒரு தேசிய வளமும் எந்த ஒரு வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படாது என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்
நேற்றைய தினம் (04) திருகோணமலையில் மரமுந்திரிகை செய்கைக்காக 200 ஏக்கர் பரப்பளவில் பயிற்செய்கை செய்வதற்கான ஆரம்பகட்ட நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்
திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படவுள்ள மரமுந்திரிகை செய்கையினை ஆரம்பிப்பதத்திற்கான ஆரம்ப கட்ட நிகழ்வாக மரமுந்திரிகை கன்றுகள் நடப்பட்டது
இதன்போது நாட்டின் தேசியவளம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து நேற்றையதினம் நாடுபூராகவும் துறைமுக அதிகார சபை,மின்சார சபை,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் இதுதொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்த போது,
நாட்டின் எந்த ஒரு தேசிய வளமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. அதுவே எமது நோக்கமாக இருப்பதாகவும் ஆட்சிக் காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் தேசிய வளம் என்ற வகையில் நாட்டின் எந்தவொரு வளத்தினையும் எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்வதில்லை என என்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோன்று அமெரிக்காவின் MCC ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது எம்மால்.
கடந்த ஆட்சியாளர்கள் இதுவரை ஆட்சியில் அமர்ந்திருந்தால் நாட்டின் பல தேசிய வளங்கள் இது வரை விற்பனை செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு விற்றபனை செய்ததினை மீட்ட எம்மை நாட்டின் தேசிய வளத்தை விற்பனை செய்வதாக குற்றம் சுமத்துகின்றனர்.
நாம் எந்த ஒரு வளத்தினையும் யாருக்கும் விற்பனை செய்யவில்லை. உதாரணமாக திருகோணமலையில் உள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை முன்னைய ஆட்சிக்காலத்தில் தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாம் அதனை மீட்டு சீனித் தொழிற்சாலையினை ஐம்பத்தி ஒருவித பங்குகளுக்கு அரசாங்கம் எடுத்து புனர் நிர்மாணம் செய்து ஆரம்பிப்பதற்கான சகல வேலைத் திட்டங்களிலும் நிறைவு செய்துள்ளோம்.
மக்கள் ஒன்றை மற்றும் புரிந்துகொள்ளவேண்டும். விற்பனை செய்யப்படுவது என்பது வேறு அபிவிருத்தி செய்யப்படுவது என்பது வேறு. எனவே நாட்டின் எந்த ஒரு தேசிய வளத்தினையும் விற்பனை செய்யும் நோக்கம் எமது அரசாங்கத்திற்கு இல்லை என இதன்போது தெரிவித்தார்.
மேலும் நாட்டில் சீனி உட்பட பல அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையினை நீக்கிய வர்த்தமானி ஒன்று நேற்றைய தினம் வெளியிட பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விலையேற்ற அதிகரிப்பினால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றனர். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்-
உள்நாட்டு சீனி உற்பத்தி அமைச்சர் என்ற வகையில் உள்நாட்டு உற்பத்தி சீனியின் விலை எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என நான் முன்னரே தெரிவித்திருந்தேன். எவ்வாறாயினும் சீனியின் நிர்ணய விலை நீக்கப்பட்ட போதிலும் லங்கா சதோச மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக குறைந்த விலையில் விற்பனை செய்வதத்தற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லங்கா சதோச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளோம். அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் லங்கா சதோச மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக குறைந்த விலைக்கு அதாவது ஒரு கிலோ கிராம் சீனி 125 ரூபாய்க்கு மாத்திரமே விற்பனை செய்யப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இறக்குமதி சீனி விலை அதிகரிக்க பட்டாலும் உள்நாட்டு சீனியின் விலை அதிகரிக்க படாது என உறுதியாக கூறுவதாக இதன் போது தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரள, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் –