கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னிலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொவிட் தடுப்பூசி இன்று ஏற்றும் பணிகள் ஆரம்பமானது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பில் பிராந்திய சுகாதார நிலையங்களில் மூன்றாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இ்று முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் செலுத்திக்கொண்டார். தொடர்ந்து வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து பொலிசார், படையினர் உள்ளிட்ட முன்னிலை பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1