28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் நேற்று பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு தொற்று; பண்டிகை காலத்தில் அவதானமான செயற்படுங்கள்: கிளிநொச்சி MOH வைத்தியர் சரவணபவன்!

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதையும், பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட் பரவல் மற்றும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளர்களிற்கான மூன்றாம்கட்ட மாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் முதல் தடுப்பூசியாக சைனாபோம் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். இரண்டாவது தடுப்பூசியை 70 வீதமானவர்கள் பெற்றுள்ளார்கள்.

அதேவேளை 20 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் 34 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். எனவே எதிர்வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான பைசர் தடுப்பூசி வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான 3ம் கட்ட தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

ஆகவே, 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில் பின்னடிக்காமல் தற்பொழுது வழங்கப்படும் சைனாபோம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும். அவர்களிற்கும் எதிர்காலத்தில் 6மாதம் முடியும் காலத்தில் பைசர் தடுப்பூசி மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்க சந்தர்ப்பம் உள்ளது.

ஆகவே, பைசர்தான் வேண்டும் என்று இருக்காமல் முதல் இந்த ஊசியை பெற்று பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு 6 மாத நிறைவில் பைசர் வழங்கப்படும். அதேவேளை தற்பொழுது நோய் நிலை குறைந்துள்ள நிலையில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அதேநேரம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஏனெனில், எதிர்காலம் எப்படியாக அமையும் என்று உறுதியாக கூற முடியாது. தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட நாடுகளில் மீண்டும் நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே இந்த இடைவெளியை பாவித்து அனைவரும் முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவ்வூசியை போடாதவர்கள் போட்டுக்கொள்ளவும்.

வீடுகளிலிருந்து வர முடியாதவர்கள் தகவல் வழங்கினால் வீடுகளிற்கு வந்து தடுப்பூசியை செலுத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். இந்த ஒரு இருமாத இடைவெளியை பாவித்து தடுப்பூசிகளை செலுத்தி தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது தடுப்பூசி போடாது இருப்பவர்கள் 20 வீதமானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களும் முன்வந்து இரண்டாவது தடுப்பூசியை பெற்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாம். ஏனெனில், முதலாவது தடுப்பூசி அவர்களை பாதுகாக்கும் என முடிவு செய்ய முடியாது.

இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்டு மூன்றாம் தடுப்பூசி வழங்குவதற்கு முக்கிய காரணம் என்னவெனில், இரண்டாவது தடுப்பூசி நீண்ட காலத்திற்கு பாதுகாப்பினை வழங்காது. ஆகவே அந்த அடிப்படையில் மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படுகின்றது. மூன்றாவது தடுப்பூசியாக பைசர் அனைவருக்கும் கிடைக்கும் என்பதால் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 வீதமான மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். மிகுதியானவர்களும் பின்னிற்காமல் பாடசாலைகளிற்கு அல்லது சுகாதார சேவைகள் பணிமனைக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும்.

ஏனைய 20 வீதமானவர்கள் ஏன் தடுப்பூசயை பெற்றுக்கொள்ளவில்லை என்பது வினாவாக இருக்கின்றது. பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளது. ஆகவே பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகளிற்கன பாடசாலை ஆர்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த நோய் பரவல் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காணப்படுகின்றது. ஆகவே, சுகாதார முறைகளை பின்பற்றி பாடசாலைகள் நடைபெற வே்ணடும. அதேவேளை, பாடசாலைகளிற்கு காய்ச்சல், தடிமன் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களைின் நோய் நிலையை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இனிவரும் காலம் மிகவும் முக்கியமான காலம். இதில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி நோய் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஊழியர்களிற்கு செலுத்துவதற்கான 900 ஊசிகளை பெற்றுக்கொண்டுள்ளோம். சுகாதார துறையில் நேரடியாக பணியாற்றுபவர்கள், பொலிசார் உள்ளிட்டோருக்கு வழங்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் பரவல் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளாந்தம் 10 தொடக்கம் 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் 20 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். தற்பொழுது பரவல் குறைந்து காணப்படுகின்றது. அனைத்து வைத்தியசாலைகளிலும் அன்டியன் பரிநோதனை தனியொரு பிரிவாக வைத்து மேற்கொண்டு வருகின்றோம்.

தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்தவர்களாக உள்ளனர். அவர்கள் பாடசாலை மாணவர்களாவர். இவ்விடயம் மிக முக்கிய கவனத்திற்கொள்ளவேண்டிய விடயமாக அமைகின்றது.

நாடு முடக்கப்பட்டு திறக்கப்பட்டதன் பின்னர் தொற்று பரவல் குறைந்துள்ளது. நாடு முழுவதும் குறைந்துள்ளது. ஆனால் மக்கள் நடமாட்டம் சாதாரண நிலைப்பாட்டில்தான் உள்ளது. கொவிட் என்பதை மறந்து மக்கள் அன்றாட நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். சமூக இடைவெளிகளை பேணாது கூட்டமாக கூடுகின்றார்கள்.

தீபாவளி வியாபாரங்கள் இடம்பெறுகின்றது. மக்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடமாடுவதை நாங்கள் பார்க்கின்றோம். கடந்த காலங்களில் டிசம்பர் புதுவருட காலத்தின் பின்னர் எவ்வாறு தொற்று பரவல் ஏற்பட்டது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.

எத்தனைபேர் இறந்தார்கள், தொற்று எவ்வாறு பரவியது, எவ்வாறு கஸ்டப்பட்டோம் என்பதையெல்லாம் உணராமல் இந்த தீபாவளி காலத்திலும் மக்கள் இவ்வாறு நடந்தால் மீண்டும் பாரிய அனர்த்தம் ஏற்படும் நலை உருவாகும்.

விதிக்கப்பட்ட விதிகளிற்கமைவாகவே வழிபாடுகளை செய்யலாம் என அறிவுறுத்தியிருக்கின்றோம். அதனை நாங்கள் தீவிரமாக கண்காணிப்புாம். அதற்கு அனைவரினது ஒத்துழைப்பும் எமக்க தேவை. ஒத்துழைப்பு இல்லாது சூரன்புார் கொண்டாடுவது, கூட்டமாக நிற்பதை தடுப்போம்.

ஆனால், அதனையும் மீறி செயற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு எம்மிடம் போதுமான ஆளணி இல்லை. இருக்கின்றவர்களும் சோர்ந்து களைப்படைந்துள்ளார்கள். மக்கள் தாங்கலாகவே உணர்ந்து செயற்பட வே்ணடும்.

கொவிட் வராது என்று ஒருபோது எண்ணாதீர்கள். மீண்டும் வரலாம். பாதிப்புக்களையும் உண்டாக்கலாம். ஆகவே, இனிவரும் காலங்கள் கொண்டாட்ட காலங்கள். தீபாவளி, சூன்போர், கிறிஸ்மஸ் பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்கள் ஒத்துழைத்து செயற்படுவதன் ஊடாகவே மாவட்டத்தின் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment