பசறை பிரதேச சபையில் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று (02) 7 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பசறை பிரதேச சபையின் விசேட சபை அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் பசறை பிரதேச சபையின் தவிசாளர் R.M. ஞானதிலக தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது சபையின் உறுப்பினர்கள் 23 பேரில் இன்றைய விசேட சபை அமர்வுக்கு 15 பேர் மாத்திரம் சமூகமளித்திருந்தனர். இதன்போது சபையின் தவிசாளர் R.M. ஞானதிலக சபை உறுப்பினர்களிடம் 2022 ற்கான வரவு செலவு திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தார். 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1