கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழ்துள்ளார்.
கொடிகாமம், கச்சாய் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற 78 வயது முதியவரை, மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞன் மோதி விபத்து நேர்ந்தது.
முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொடிகாமத்தை சேர்ந்த சிவசற்குருநாதன் (78) என்பவரே உயிரிழந்தார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 22 வயதான இளைஞன் சிறு காயமடைந்தார். அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை.
காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1