லக்சம்பேர்க் பிரதமர் சேவியர் பெட்டலின், பல்கலைக்கழகத்தில் கற்கும் போது சமர்ப்பித்திருந்த ஆய்வுக்கட்டுரையில், இரு பக்கங்கள் மட்டுமே திருடப்படாதவை என்பது தெரிய வந்துள்ளது.
சுமார் 20 ஆண்டுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட அந்த 56 பக்க ஆய்வுக்கட்டுரையில், 2 புத்தகங்கள், 4 இணையத்தளங்கள், ஒரு செய்திக் கட்டுரை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இருந்ததாக ஊடகங்கள் வெளிச்சமிட்டுள்ளன.
மேலும் 20 பக்கங்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று த கார்டியன் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
பெட்டல், அந்த ஆய்வுக்கட்டுரையை முதுகலைப் பட்டத்திற்கு நிகரான கற்கை ஒன்றுக்குச் சமர்ப்பித்திருந்தார்.
அது குறித்துக் கருத்துத் தெரிவித்த 48 வயது பெட்டல், இன்றைய கண்ணோட்டத்திலிருந்து காணும்போது, ஆய்வுக்கட்டுரையை வேற விதத்தில் செய்திருக்கலாம் என்று கூறினார்.
பல்கலைக்கழகம் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்டல், 2013ஆம் ஆண்டிலிருந்து லக்சம்பபேர்க்கின் பிரதமராக உள்ளார்.
இந்த தகவலையடுத்து, லக்சம்பேர்க் நெட்டிசன்கள் வகைவகையாக பிரதமரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.