அரசாங்கப் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்க உள்ளார்.
யுகதனவி அனல் மின் நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் கலந்துரையாடி பிரச்சினையை தீர்க்குமாறு கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
யுகதானவி அனல் மின் நிலைய ஒப்பந்தம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் நாளை கொழும்பில் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.