தைவான் மீதான சீனாவின் நடவடிக்கை தூண்டுதலாகவும், கட்டாயப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.
கிழக்காசிய உச்சி மாநாட்டில் இணையம்வழி பங்கேற்றபோது அவர் அவ்வாறு கூறினார்.
தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட அந்தச் சந்திப்பில் சீனப் பிரதமர் லீ கச்சியாங்கும் கலந்துகொண்டார்.
தைவானியத் தற்காப்பு வட்டாரத்துக்குள் பலமுறை சீனப் போர் விமானங்கள் அத்துமீறியது வட்டாரத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாய் அமைந்ததாக பைடன் குறிபபிட்டார்.
ஜனநாயகத்தையும், சுதந்திரமான கடல் போக்குவரத்தையும் தற்காக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று வட்டாரத் தலைவர்களுக்கு அவர் மறுவுறுதியளித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1