வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த கைதிகளுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு மேலதிகமாக பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் குழுவொன்று போராட்டம் நடத்தியதாகவும், கட்டிடங்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 54 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் நேற்றிரவே அவர்களை கீழே இறக்க முடிந்தது.
சேதங்கள் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் பூஸ◌ா சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.