படப்பிடிப்பு தளத்தில் அமெரிக்க நடிகர் அலெக் பால்ட்வின் துப்பாக்கியை தவறுதலாக கையாண்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார். படத்தின் இயக்குனர் காயமடைந்துள்ளார்.
ரஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு சாண்டா ஃபெவின் தெற்கு புறநகரில் உள்ள பாலைவனத்தில் படமாக்கப்பட்டபோது இந்த விபரீதம் நடந்தது.
ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். இயக்குனர் ஜோயல் சவுசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹலினா ஹட்சின்ஸ் ஹெலிகொப்டர் மூலம் நியூ மெக்ஸிகோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
48 வயதான இயக்குநர் ஜோயல் சவுசா, ஆம்புலன்ஸ் மூலம் கிறிஸ்துஸ் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரது உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1