அவுஸ்திரேலியாவில் சென்ற வார இறுதியின்போது காணாமற்போன 4 வயதுச் சிறுமியைக் கண்டுபிடிக்கத் தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பொழுதுபோக்கிற்காக முகாமில் தங்கும் இடத்திலிருந்து கிளியோ ஸ்மித் என்ற அந்தச் சிறுமி சென்ற சனிக்கிழமை (16) கடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கிளியோவின் தாயார், அன்று காலை 6 மணிக்கு எழுந்தபோது, அவர்கள் தங்கியிருந்த கூடாரம் திறந்திருந்தது.
கிளியோவைக் காணவில்லை என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார்.
அதை அடுத்து, தேடல் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கிளியோ, கூடாரத்திலிருந்து கடத்தப்பட்டார் என்று நம்புவதாகக் காவல்துறை அதிகாரி கூறினார்.
சிறுமியின் பாதுகாப்புக் குறித்து அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் அவரை உயிரோடு மீட்கமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.