கருங்கடலுக்கு மேல் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு B-1B ரகப் போர் விமானங்களை, ரஷ்யாவின் இரு போர் விமானங்கள் பின்தொடர்ந்ததாக ரஷ்யத் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் போர் விமானங்களைக் கருங்கடலுக்கு வெளியே ரஷ்யப் போர் விமானங்கள் இட்டுச்சென்றன.
அந்த அமெரிக்கப் போர் விமானங்கள், அணுவாயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டவை.
ஆனால், தற்போது அவை சாதாரண ஆயுதங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், ரஷ்யாவின் எல்லைகள் மீறப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்டின் உக்ரேனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு உக்ரேனில் அமைதிக்கு இடையூறாக ரஷ்யா இருப்பதாக அவர் கூறினார்.
கருங்கடலிலும் உக்ரேனின் எல்லைகளிலும் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவர் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டார்.