கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற விமான நிலைய பணியாளரான, துப்பரவு மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யதுள்ளார்.
25 வயதுடைய துப்பரவு மேற்பார்வையாளர் இன்று (19) அதிகாலை சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் தனது ஆடைகளுக்குள் 4 கிலோ 848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தார். அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது, சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டார்.
அந்த நபரிடம் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி 7 கோடி ரூபாய் ஆகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
1
+1
2