25.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வினால் கோவிட் – 19 பரவும் அபாயம்!

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளினால் கோவிட் -19 பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (19) காலை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

கோவிட் -19 சூழ்நிலை காரணமாக விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல விடயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவிர் முடியாத சில காரணங்களினால் விளையாட்டு வீரங்கள் முகக்கவசமின்றியே விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இவர்களில் எத்தனை விளையாட்டு வீரர்கள் இரண்டு தடுப்பூசியினை பெற்றுக்கொண்டனர் என்ற விபரம் கூட தெரியவில்லை. மேலும் பார்வையாளர்களும் அப்பகுதியில் குழுமி காணப்படுகின்றனர். இவ்விடயங்கள் காரணமாக கோவிட் -19 தொற்று பரவும் அபாய நிலை காணப்படுகின்றது.

சுகாதார பிரிவினரின் அனுமதியின்றி வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறுகின்றது. நகரசபை மைதானத்தினை சூழ சுகாதார நடைமுறைகளை மீறி பார்வையாளர்கள் ஒன்று கூடி நிற்கின்றனர். மேலும் விளையாட்டு கழகங்கள் என பலரும் மைதானத்தினுள் பார்வையாளர்களாக அமர்ந்துள்ளனர். எனவே நகரசபையினர் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் நகரசபையினர் பார்வையாளர்கள் ஒன்று கூடுவதினை தவிர்க்க வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் எந்தவொரு விளையாட்டு நிகழ்வும் சுகாதார பிரிவினரின் அனுமதியுடனே இடம்பெற வேண்டுமெனவும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரினால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்

Pagetamil

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் நீதி கோரி போராட்டம்

Pagetamil

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

Leave a Comment