சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதற்காக திருகோணமலையில் தங்கியிருந்த 67 பேரில் 64 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு பிணை வழங்குமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (13) குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களாக திருகோணமலை ஒரு மலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது அரசாங்க புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்களை நேற்று கைது செய்ததாகவும் தெரியவருகின்றது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 வயது உடைய தாய், 14 வயதுடைய மகன் மற்றும் 9 வயதுடைய மகள் ஆகியோருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது.
-அப்துல்சலாம் யாசீம்-