அமெரிக்காவின், புளோரிடாவில் தன்னிடம் படிக்கும்15 வயது மாணவனுடன் உடலுறவு கொண்டதற்காக கைது செய்யப்பட்ட ஒரு ஆசிரியர் இப்போது கர்ப்பமாக உள்ளார்.
புளோரிடாவின் மியாமி அதிகாரிகளின் கூற்றுப்படி, மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியை கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்..
மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளை புறக்கணித்தல், பள்ளிச் சொத்துக்களில் துப்பாக்கியை வைத்திருத்தல் உள்ளிட குற்றச்சாட்டுக்களிற்காக 41 வயதான ஹேரி கிளாவி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பொலிசாரின் விசாரணைக்கு அந்த மாணவன் ஒத்துழைக்கவில்லை. எனினும், தொழில்நுட்ப சான்றுகளின்படி ஆசிரியையின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மாணவனின் சக பாடசாலை நண்பர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மாணவனின் தொலைபேசியில் செக்ஸ் படங்களை பார்த்ததாக கூறினர்.
ஆசிரியர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதை போலீஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார், ஆனால் அவர் கூறினார்: “இது யாருடைய குழந்தை என்று நான் ஊகிக்கப் போவதில்லை.” என்றார்.