டெல்லி லக்ஷ்மி நகர், ரமேஷ் பார்க் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதியொருவரை போலீசின் சிறப்பு பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
மொஹமட் அஸ்ரஃப் என்ற அந்த நபர், இந்திய போலி அடையாள அட்டையுடன் வாழ்ந்து வந்தார்.
ஏகே 47 ரக துப்பாக்கி, மேலதிக மகசீன், 60 தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு, 2 சிறிய துப்பாக்கிகள், அவற்றின் 50 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, பண்டிகை காலத்தை முன்னிட்டு தலைநகர் முழுவதும் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் ரோந்து பணியை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முக்கிய பகுதிகளில், காவல்துறை நாசவேலை தடுப்பு சோதனைகளை நடத்துகிறது. சந்தேகத்திற்குரிய பகுதிகளில் கூடுதல் சோதனையிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1