இலங்கையின் முன்னாள் அதிவேக குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, விளையாட்டு அமைச்சின் மூத்த ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம், அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இன்று (12) தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1