26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
விளையாட்டு

கொல்கத்தா வெற்றி: கோலி படை வெளியேறியது!

ஐ.பி.எல். தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3வது, 4வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் ரொஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல்லும், கோலியும் களமிறங்கினர்.

பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. அதன்பின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியதால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதனால் பவர்-பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

பின்னர், முக்கியமான கட்டங்களில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. எனினும் சுனில் நரைன் அதிரடியாக ஆடி கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 15 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. சகிப் அல் ஹாசன் கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எலிமினேட்டர் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை சார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த தோல்வியின் மூலம் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment