யாழ்ப்பாணம், கொக்குவிலில் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் உயிரிழந்தவர்களின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று அனுட்டிக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது படுகொலை சம்பவமாக, கொக்குவில்- பிரம்படி படுகொலை அமைந்தது.
ஒக்ரோபர் 11,12ஆம் திகதிகளில் பிரம்படியில் இந்திய இராணுவத்தினரால் 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வீடுகளில் இருந்தவர்கள் வீதிக்கு இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டும், வீதியில் படுக்க வைத்து டாங்கிகளால் ஏற்றி நசித்தும் இவர்கள் கொல்லப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
4