இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், பட்ஜெட் பற்றாக்குறை 2019 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 94 சதவீதம் அதிகரித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் எங்கு செல்கிறது என்பது பற்றி அரசாங்கத்திற்கு தெளிவான யோசனை இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அரச வருவாய் இந்த ஆண்டு ஜூலை வரை வெறும் ரூ. 798 பில்லியன், செலவுகள் ரூ. 1,015 பில்லியன் என்றார்.
இது போன்ற விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தை அறிந்திருப்பதாக கூறினாலும், தற்போதைய நிர்வாகத்திற்கு பொருளாதார மீட்புக்கான தெளிவான பாதை இல்லை என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1