28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

சினிமா பாணியில் பழிவாங்கல்: சரணடைய சென்றவர்களை பொலிஸ் நிலைய வாயிலிலேயே டிப்பர் மோதியது; 5 பேர் வைத்தியசாலையில்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள், பொலிஸ் நிலைய நுழைவாயிலில் வைத்து டிப்பர் வாகனத்தினால் மோதி காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

டிப்பர் வாகனம் மோதியதில் மன்னார் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் நின்ற 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது திட்டமிட்டு, சினிமா பாணியில் நடத்தப்பட்ட விபத்து என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் தோட்டக்காட்டு பகுதியில் இரண்டு தரப்பிற்கிடையில் ஏற்பட்ட சச்சரவை தொடர்ந்து, சில நாட்களின் முன் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்டவர் பெக்கோ கனரக வாகன சாரதியாவார்.

இன்று, காலையில், தாக்கப்பட்டவர் சார்பான இன்னொருவர் சென்று, பெக்கோ சாரதியை ஏன் தாக்கினீர்கள் என கேட்டுள்ளார். இதை தொடர்ந்து ஏற்பட்ட சச்சரவில், அந்த நபரும் தாக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, பொலிசாரால் தேடப்பட்ட- இரண்டு தாக்குதல்களையும் நடத்திய- தரப்பினர் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைய சென்றனர்.

இந்த இளைஞர்கள் மன்னார் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் நின்ற போது, டிப்பர் வாகனமொன்று அவர்களை மோதித்தள்ளியது. ஐந்து இளைஞர்கள் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை எற்படுத்திய டிப்பர் மற்றும் சாரதி தப்பி சென்றுவிட்டனர். வாகனத்தையும், சாரதியையும் மன்னார் பொலிஸார் தேடி வருகிறார்கள்.

குறித்த விபத்து நன்கு திட்டமிடப்பட்ட விபத்து எனவும் விபத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் பண பலத்தை பயன்படுத்தி விபத்துக்கான காரணத்தை திசை திருப்பபடுவதற்கான வாய்புக்கள் அதிகம் இருப்பதால் பொலிஸார் உரிய விதத்தில் விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் நிலைய நுழைவாயிலிலேயே சினிமா பாணியில் நடந்த பழிவாங்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment