26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
கிழக்கு

புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கல்முனையில் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம் கல்முனை தாருஸ்ஸபா அமையத்திலும், சாய்ந்தமருது சற்குரு மகாம் ஷாவியதுல் வாஹிதிய்யா வ ஹல்லாஜியாவிலும் நடைபெறும் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும் இம்முறையும் கடந்த வியாழக்கிழமை (07) மாலை தாறுஸ்ஸபா அமையத்தின் தவிசாளர் உஸ்தாத் சபா முஹம்மத் தலைமையில் கல்முனையிலும், சாய்ந்தமருது சற்குரு மகாம் தலைவர் எம்.எம்.எ.ஜப்பார் தலைமையில் சாய்ந்தமருதிலும் நடைபெற்றது.

வழமையாக வெகுவிமர்சையாக நடைபெறும் இந்நிகழ்வு இம்முறை கொரோனோ தொற்று  காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே சுகாதார நடைமுறைகளை பேணி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மௌலவிமார்களின் மௌலித் முழக்கத்துடன் நிகழ்வின் பிரதம அதிதி அஸ்ஸெய்யித் மக்கத்தார் அப்துல் மஜீத் கலீபத்துல் ஹல்லாஜ் அவர்களினால் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சாய்ந்தமருது சற்குரு மகாம் செயலாளர் ஏ.சி.எம். நிஸார், உட்பட  நிர்வாகிகள், தாறுஸ்ஸபா அமையத்தின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தருமை ஆதீனம் திருக்கோணேஸ்வரத்திற்கு வருகை

east tamil

கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள்

east tamil

டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸார் உயிரிழப்பு

east tamil

திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

east tamil

Update – 3 – கடலில் நீராட சென்ற 3 பேர் – மூவரின் சடலமும் மீட்பு

east tamil

Leave a Comment