26.2 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இலங்கை

UPDATE: கீரிமலை கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் (PHOTOS/VIDEO)

யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சீவன் (19) எனும் இளைஞனே காணாமல் போன நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்காக கீரிமலைக்கு சென்று இருந்ததாகவும், கிரியைகளை முடித்துக்கொண்டு, கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்து நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பாதாள உலக தலைவர்கள் கடல் வழியாக தப்பிச் சென்றனரா?

Pagetamil

புகையிரதத்தை பற்றி எதுவுமே தெரியாது… தண்டவாளத்தில் புகைப்படம் எடுத்த போது தாயும் மகளும் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்!

Pagetamil

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

Leave a Comment