25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
சினிமா

ஒருவேளை சாப்பாடு… உடுத்த துணிகூட இல்லை: நெகிழ வைத்த பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கி, போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக இருந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த சீசனில் ராஜூ ஜெயமோகன் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் கலக்கி வருகின்றனர்.  தாமரை செல்வியின் வெள்ளேந்திதனம், பவானி ரெட்டியின் சீரியல் வாழ்க்கை, ஜமீன்கோட்டை ஜோக், ராஜூ ஜெயமோகனின் பேய்க்கதை ஆகியவை முதல் நாளில் சுவாரஸ்ய காட்சிகள். மேலும் இப்போதே ஒரு சில போட்டியாளர்களுக்கு ஆர்மிகள் தொடங்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய 2வது நாளில் சென்டிமென்ட் தொடங்கிவிட்டதாக இன்றைய முதல் புரமோவில் இருந்து தெரியவருகிறது. முதற்கட்டமாக இசைவாணி தான் கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்து கூறியபோது, ‘தனது தந்தையார் துறைமுகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் திடீரென அவருக்கு வேலை போய்விட்டதால் தங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை இருந்ததாகவும் தெரிவித்தார்.

தனக்கு நிறைய துணிகள் போட வேண்டும் என்ற ஆசை என்றும் ஆனால் போட்டுக்கொள்ள நல்ல துணி கூட இல்லாமல்தான் கஷ்டப்பட்டதாகவும், ஒரு வேளை சாப்பாட்டு தான் தன்னுடைய வீட்டில் இருக்கும் என்றும், அந்த சாப்பாட்டையும் நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அதனை சாப்பிடாமல் வைத்து விடுவார் என்றும் கண்ணீருடன் கூறினார்.

இறுதியில் அவர் கூறிய பஞ்ச்தான் தான் இன்றைய புரமோவின் ஹைலைட். ’கஷ்டப்படுவதை கஷ்டப்பட்டு கொண்டே இருப்போம் என்று நினைக்க வேண்டாம். என்றைக்காவது ஒருநாள் வாழ்க்கை மாறும்’ என்று தெரிவித்தார்.

இன்றைய புரோமோவில் இருந்து இன்று முழுவதும் சென்டிமென்டாக இருக்கும் என தெரிகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: விஜய் நேரில் வாழ்த்து!

Pagetamil

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Pagetamil

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil

Leave a Comment