இலங்கை இந்திய நட்புறவு திட்டதின் கீழ் வவுனியாவில் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் இன்று பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை இந்திய நிதி உதவி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது
அந்தவகையில் வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் அருனோதயா நகரில் பூர்த்தி செய்யப்பட்ட 24 வீடுகள் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பயனாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்ட வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, இந்திய துணை தூதுவர்; ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வீடுகளை திறந்து வைத்தனர்.
குறித்த வீடுகள் இந்திய நிதியுதவியின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், கு.திலீபன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த செல்வா, மற்றும் அரச உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.