நேற்று 893 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 518,775 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட அனைத்து தொற்றாளர்களும் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 47,726 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 597 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 458,085 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று சந்தேகத்தில் 2,598 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதற்கிடையில், நேற்று, இலங்கையில் மேலும் 58 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் உறுதி செய்யப்பட்டதால், இறப்பு எண்ணிக்கை 12,964 ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1