24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

பெற்றோலுக்காக 7 மணித்தியாலம் காத்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கார் சாரதி; ஏமாற்றமே மிஞ்சியது!

கால்ப்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொகுசு காருடன் 7 மணித்தியாலங்களாக பெற்றோலுக்காக காத்திருந்த சாரதி, இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்.

போர்த்துக்கல்லை சேர்ந்த கால்ப்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரோனால்டோ, மன்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்காக ஆடி வருகிறார். தற்போது நடக்கும் சம்பியன் கிண்ண தொடரில், வில்லாரியலுக்கு எதிரான ஆட்டத்திற்காக பிரித்தானியாவின் மன்செஸ்டர் நகரத்தில் ரொனால்டோ குடும்பம் தங்கியுள்ளது.

ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் வில்ம்ஸ்லோ, செஷயரில் உள்ள ஏழு படுக்கைகள் கொண்ட மாளிகையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை, ரொனால்டோவின் சொகுசு காரான பென்ட்லியை எரிபொருள் நிரப்ப, சாரதி செலுத்திச் சென்றார். அந்த கார்  220,000 பவுண்ஸ் பெறுமதியானது.

பிரித்தானியாவில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

ரொனால்டோவின் கார் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை வரிசையில் காத்திருந்தது.

அந்த காரில் ஒரு சாரதியும், பாதுகாவலரும் இருந்தனர்.

பெற்றோல் நிரப்பிய ஒரு டேங்கர் வரும் என்ற நம்பிக்கையில் பலர் காத்திருந்தனர். எனினும், பெற்றோல் வரவில்லை. இதையடுத்து, ரொனால்டோவின் காரிலிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, ரொனால்ட்டோ திட்டமிட்டபடி மன்செஸ்டரில் இருந்து வெளியேற முடியாமல் போகலாமென தெரிகிறது. பெற்றோல் கிடைக்கும் வரை அவர் தற்போதுள்ள இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment