கனடா-அமெரிக்க எல்லையில் திருமணம் செய்த ஜோடி: கொரோனா கட்டுப்பாட்டை மீறாமல் இரு நாட்டு உறவுகளும் பிரசன்னம்!

Date:

கொரோனா கட்டுப்பாடுகளால் நாடுகளிற்கிடையில் பயணம் செய்ய முடியாத கட்டுப்பாடு நிலவும் நிலையில், கனடாவிலிருந்து வந்த உறவினர்கள், அமெரிக்காவில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா- கனடா எல்லையில் இந்த திருமணம் நடந்தது.

நியூயோர்க் நகரத்தின் கேடிவில்லில் வசிப்பவர்கள் கரேன் மஹோனி மற்றும் பிரையன் ரே. இருவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. தம்பதியர் ஒருவருக்கொருவர் 35 ஆண்டுகளாக அறிந்திருக்கிறார்கள். இருவரும் ஸ்கை பயிற்றுவிப்பாளர்களாக வேலை செய்கிறார்கள். இருவருமே முன்பு திருமணம் செய்து கொண்டு, தற்போது தனித்து வாழ்பவர்கள்.

ரே மற்றும் மஹோனி இருவரும் செப்டம்பர் 25 அன்று திருமணம் செய்யவிருந்தனர். இந்த நிகழ்வில் தங்கள் குடும்பத்தினர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்பியிருந்தனர்.

மஹோனியின் பெற்றோர் மற்றும் 96 வயதான பாட்டி கனடாவில் வசிக்கின்றனர். அவர்கள் தனது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அவர் விரும்பினார்.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, தற்போது இரண்டு நாடுகளின் எல்லை கடந்து அத்தியாவசியமற்ற பயணிகள் பயணிக்க முடியாது. இரு நாடுகளுக்கிடையேயான விமானப் பயணம் சாத்தியமானாலும், மஹோனியின் பாட்டிக்கு  தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது.

இறுதியாக, இந்த ஜோடி அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள ஒரு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தது. அங்கு தடுப்பு வேலி இல்லை. இரண்டு எல்லையில் நிற்பவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் எல்லை தாண்டக்கூடாது.

திருமணத்தின் போது நியூயோர்க்கில் இருந்து வந்த ஒரு அதிகாரி, தம்பதியினர் மற்றும் திருமண விருந்தினர் எல்லையில் அமெரிக்கப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ​​மஹோனியின் உறவினர்கள் கனேடிய பக்கத்தில் இருந்தனர். திருமணச் சான்றிதழில் கையொப்பமிடுவதைத் தவிர, மற்ற விழாக்கள் எல்லையில் செய்யப்பட்டன. கையொப்பமிடுவது மறுநாள் நியூயோர்க்கிற்கு திரும்பிய பிறகு செய்யப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்