25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
சினிமா

‘தளபதி 66’ அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகும் 65-வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜார்ஜியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைவது பெருமையாக இருப்பதாக தில் ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘தளபதி 66’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment