Pagetamil
உலகம்

தனிமைப்படுத்தல் முடிந்ததும் மீன்பிடித்த ரஷ்ய ஜனாதிபதி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் கொரோனா தனிமைப்படுத்துதல் முடிந்துவிட்டதால், மீன் பிடித்தலில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஜனாதிபதி புடின் ஸ்புட்னிக் V தடுப்பூசி இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டிருந்தார். இருப்பினும் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் பூரண ஆரோக்கியத்துடனேயே உள்ளார். அவர் தனது வழக்கமான அலுவல்களை மேற்கொள்வார். ஆனால் தனிமைப்படுத்துதலில் அவர் தனது அலுவல்களை மேற்கொள்வார் எனக் க்ரெம்ளின் மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில் ஜனாதிபதி புடின் தனது தனிமைப்படுத்தல் முடிந்ததால் பழையபடி உற்சாகமாக மீன் பிடித்தலில் ஈடுபட்டார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் இவர், மேல்சட்டை இல்லாமல் சன் க்ளாஸ் அணிந்து கொண்டு, குதிரையில் அமர்ந்துவாறு கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் வைரலானது.

தற்போது, புடின் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் மீன் பிடிக்கும் காட்சி அடங்கிய புகைப்படங்களை க்ரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ளது. புடினுடன் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சோய்குவும் இருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க கைதிகளை நரகத்திற்கு அனுப்பும் திட்டம்

east tamil

மொஸ்கோவில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி

east tamil

“Nudeify AI” தொழில்நுட்பங்களுக்கு தடையுத்தரவு

east tamil

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்

east tamil

சூடானில் 54 பேர் பலி

east tamil

Leave a Comment