Pagetamil
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கோவிட் தொற்றால் மரணம்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் இணைப்பாளர் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சலாஹீதீன் ஹாஜி (சாபு) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வவுனியாவில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவர், பட்டக்காடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜீம்ஆ பள்ளி வாசல் தலைவரும், பட்டானிச்சூர் மன்பஉல் உலூம் அரபுக் கல்லூரியின் உபதலைவரும், வவுனியா பள்ளிவாசல் குழுவின் பொருளாளரும், சிறிலங்கா பொதுஜன பெரமுவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் இணைப்பாளரும் ஆவார்.

குறித்த நபரின் சடலம் அடக்கம் செய்வதற்காக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஒட்டமாவடிக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரின் மீன்கள் விலைக்கான விசேட அறிவிப்பு

east tamil

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

தேர்தல் செலவு அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கான விசாரணை ஆரம்பம்

east tamil

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு!

east tamil

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

Leave a Comment