ஹொங்கொங்கில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர், சுமார் 1.4 மில்லியன் டொலர் மதிப்புமிக்க வீட்டை பரிசாகப் பெற்றுள்ளார்.
ஹொங்கொங்கில் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்களை ஈர்ப்பதற்கு அதிர்ஷ்டக் குலுக்கில் ஒரு மில்லியன் டொலர் வீடு, பரிசாக முன்வைக்கப்பட்டது.
இங் டெங் ஃபொங் அறக்கட்டளை, Chinese Estates Holdings சொத்து மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களிடையே இந்த அதிர்ஷ்டச் சீட்டிழுப்பை நடத்தின.
ஹொங்கொங்கில் வீடுகளின் விலை அதிகமாக உள்ள நிலையில், அதிர்ஷ்டச் சீட்டிழுப்பு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நல்ல உந்துதலாக அமைந்தது. பெருமளவானவர்கள் தடுப்பூசி செலுத்தி, சீட்டிழுப்பில் கலந்து கொண்டனர்.
34 வயதான ஒருவர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றார்.
வாடகை வீட்டில் வசித்துவந்தத் அவருக்கு முதல்முறையாகச் சொந்த வீடு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஏற்பாட்டாளர்கள், இரண்டாம் கட்ட அதிர்ஷ்டச் சீட்டிழுப்பையும் அறிவித்துள்ளனர்.
முதல் பரிசு 1.5 மில்லியன் டொலர் மதிப்புமிக்க இன்னொரு வீடு.
இம்மாதம் 30-ஆம் திகதிக்குள் தடுப்பூசியை ஒரு முறையாவது போட்டுக்கொள்வோர், அதிர்ஷ்டச் சீட்டிழுப்பிற்கு தகுதி பெறுவர்.