30.6 C
Jaffna
April 6, 2025
Pagetamil
இலங்கை

அமெரிக்க தூதராக பதவியேற்கிறார் மஹிந்த சமரசிங்க: நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கிறார்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பொறுப்பை விரைவில் ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க விஜயத்தை ஆரம்பிப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மஹிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும், அமெரிக்க தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் பிரச்சினைகளில் இலங்கை தற்போது கடுமையான சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த விவகாரங்களின் மையமாக அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.

எனவே, அமெரிக்காவை கையாள அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவையென்ற அடிப்படையில், கோட்டாபய இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க தூதுவர் ரவிநாத ஆர்யசிங்கவின் ஓய்வு அறிவிப்பு வெளியான நிலையில், அந்த பதவியை ஏற்க மஹிந்த சமரசிங்க தான் சரியான நபர் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல சமயங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பாக அவர் செயற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அமெரிக்காவை கையாள அவர் பொருத்தமானவர் என அரசு கருதியுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, மஹிந்த சமரசிங்க பதவிவிலக முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

தற்போது அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

இதையும் படியுங்கள்

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

மோடிக்கு உயரிய இலங்கை விருது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!