26.5 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இந்தியா

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா!

ஊராட்சிமன்ற தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தன் காதல் கணவருடன் சேர்த்து வைக்ககோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே அயத்தூர் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்து வருபவர் தேவிதாஸ்.அதிமுக ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். வினோத் அதே பகுதியை சேர்ந்த மாலினி (21) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு ஊராட்சி மன்ற தலைவரான தேவிதாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வினோத்தும் மாலினியும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.பின்னர் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தன் தாய், தந்தையை சமாதானம் செய்துவிட்டு வருவதாக வினோத் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வினோத்தின் நடவடிக்கைகள் மாறியதாக கூறப்படுகின்றது. மேலும் தனக்கு தன்னுடன் வாழ விருப்பமில்லை என கூறி வினோத் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனை தொடர்ந்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி இளம் பெண் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி நேரில் சென்று வினோத் மற்றும் மாலினி வீட்டாரிடம் விசாரணை நடத்தி கணவனின் தந்தை வீடான ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தங்க வைத்து சென்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

Pagetamil

அபாய கட்டத்தைக் கடந்தார் சைஃப் அலிகான்; 7 விசாரணைக் குழுக்கள் அமைப்பு

Pagetamil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

Leave a Comment