வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர்களுக்கான கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அவர்களுக்கான கட்டில்களுக்கான பற்றாக்குறை மற்றும் இடவசதிப் பிரச்சனை என்பன ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நோயாளர்களுக்கான வசதிகளுடன் கூடிய 3 கட்டில்கள் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் லாவண்யா நகையக உரிமையாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நான்கு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய குறித்த கட்டில்களை வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன், வைத்தியர் மதுரகன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1