தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட பிராந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது மாதாந்த நீர்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் ஏற்கனவேயுள்ள நீர்ப்பட்டியல் நிலுவைகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீர் வழங்கல் சபையானது மக்களுக்கான குடிநீரினை வழங்கும் பொருட்டு குடிநீரிற்கான உற்பத்தி செலவாக பாரிய தொகையொன்றை முதலிட்டு வருகின்றது. எனவே அதனை தொடர்ந்து மக்களுக்கு தொடர்ச்சியான சேவையினை வழங்கும் பொருட்டு பயனாளிகள் அனைவரையும் காலக்கிரமத்தில் தங்களது நீர்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் ஏற்கனவேயுள்ள நீர்ப்பட்டியல் நிலுவைகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் நீர்பட்டியல் செலுத்துவதற்காக வரிசையில் நின்று நீங்கள் உங்களது பாதுகாப்பிற்கு தீங்கேற்படாதவாறு வீட்டில் இருந்தவாறே ஒன்லைன் மூலமாக தேசிய நீ வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஸ்மார்ட் சோன் (Smart Zone waterboard.lk) என்ற இணையத்தளமூடாக மூலமான மாதாந்த நீர்ப்பட்டியல் செலுத்தும் முறை மூலமாகவும்) மற்றும் ஒன்லைன் மூலமான வங்கிகள், ஒன்லைன் மூலமான தொலைத்தொடர்பு சேவைகள், மற்றும் ஒன்லைன் மூலமான அரச தனியார் சேவை வழங்குநர்கள் மூலமும் நீங்கள் உங்களது கொடுப்பனவுகளை செலுத்திக்கொள்ள முடியும்.
அத்துடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா, யாழ்ப்பாண காரியாலய காசாளர் பிரிவிலும் தங்களுக்கான கொடுப்பனவுகளை வழமைபோன்று மேற்கொள்ள முடியும் என்பதையும் அறிவித்துள்ளார்கள்.