யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
சுன்னாகம், கந்தரோடை பகுதியை சேர்ந்த திருலிங்கம் சாருகா (22) என்பவரே நேற்று மதியம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.
அவரை காணவில்லையென தேடிய சகோதரன் தேடிய நிலையில் அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும், உடனடியாக கயிற்றை அறுத்து வீழ்த்தி, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
மாணவியின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவியின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். மாணவியின் தவறான முடிவிற்கு காரணம் எதுவும் வெளியாகவில்லை. கற்றல் சுமை காரணமாக இருக்கலாமென அவரது நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான அவர், அந்த பாடசாலையின் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். அந்தக் கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தின் 43வது அணி மாணவியாக கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.