அசாம் மாநிலத்தின் நாகான் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 25 முறை தனது கணவரை விட்டு, வெவ்வேறு ஆண்களுடன் கள்ளக்காதலாகி வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளார்.
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொரு முறை ஓடிச் சென்ற பின்னரும் தனது கணவனிடமே திரும்பி வந்துள்ளார். கடந்த சில தினங்களின் முன்பாகவும் அவர் ஒருவருடன் ஓடிச் சென்றுள்ளார். ஓடிப்போன மனைவி திரும்பி வருவார் என வழக்கம் போல கணவன் காத்திருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெண்ணுக்குத் திருமணம் ஆன நிலையில், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் கடைசியாக 3 மாதத்திற்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒரு நபருடன் அவர் வீட்டை விட்டு ஓடியது தான் சோகத்தின் உச்சம். சம்பவம் நடந்த செப்டம்பர் 4ஆம் திகதி, ஓட்டுநரான அந்த பெண்ணின் கணவர் வேலை முடிந்து திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை.
தன்னுடைய மூன்று மாத குழந்தையை அருகில் உள்ள வீட்டில் கொடுத்துவிட்டு, ஆட்டிற்குப் புல் எடுத்துவிட்டு வருவதாகக் கூறி சென்றுள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே கணவன் பார்த்த போது, பீரோவில் இருந்த 22,000 ரூபாய் மற்றும் சில தங்க ஆபரணங்களை அவர் எடுத்து கொண்டு மாயமாகியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த பெண்ணின் மாமனார் கூறும்போது, ”திருமணம் முடிந்ததிலிருந்து சுமார் 20-25 முறை அவர் வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்துள்ளார். வீட்டை விட்டு ஓடிய சில நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் திரும்பி வருவார். ஆனால் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எனது மகன் அவரை ஏற்றுக் கொள்வார்.
ஆனால் தற்போது பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தையைப் போட்டு விட்டுப் போனதை தான் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இதுகுறித்து எனது மகன் கூறும்போது, ”என்ன இருந்தாலும் அவள் எனது மனைவி. குழந்தைகளின் நலன் கருதி அவளை நான் மீண்டும் ஏற்றுக் கொள்வேன்” எனக் கூறியதாக அந்த பெண்ணின் மாமனார் கூறியுள்ளார்.