கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்கி கையை இழந்தவருக்கு அதனை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சகிச்சை நிபுணர் வைத்தியர் இளம்செழிய பல்லவன் உள்ளிட்ட வைத்தியர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பருத்தித்துறையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மன்னாரைச் சேர்ந்த மீனவர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை தவறுதலாக கடலில் விழுந்த நிலையில் அவரது வலது கை வலது கால் வள்ளத்தின் காற்றாடியின் சிக்குண்டு சிதைந்தது.
இந் நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியர்களால் கை மீள பொருத்தப்பட்டது.
சுமார் 5 மணித்தியாலங்கள் இந்த சத்திர சிகிச்சை இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் நியமிக்கப்படுவதற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தடையாக இருப்பதாக நேற்று முன்தினம் அரச வைத்திய அதிகாரிகள் குற்றம்சுமத்தியுள்ளனர். இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரும் நியமிக்கப்பட்டால், அதிகமானவர்கள் நன்மையடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.