25.9 C
Jaffna
January 6, 2025
Pagetamil
மருத்துவம்

கட்டிலில் ஆடக்கூடாத நாடகம் இது!

காரணம் எதுவாக இருந்தாலும் நீங்கள் ஒருபோதும் புணர்ச்சியை போலியாகச் செய்யக் கூடாது என பாலியல் – மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பாலியல் ஆராய்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்ட முடிவுகளில் மேலும் ஓர் அதிர்ச்சி உண்மை பதிவாகியுள்ளது. பாலியல் செயல்பாட்டின்போது 50 சதவிகிதப் பெண்களும் 25 சதவிகித ஆண்களும் பொய்யான ஆர்கஸத்தை (fake orgasm) அடிக்கடி ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். 87 சதவிகித பெண்களும் 69 சதவிகித ஆண்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு போலித்தனத்தை உருவாக்கியுள்ளனர்.

அதென்ன ஃபேக் ஆர்கஸம்?

பாலியல் உறவு அளிக்கும் இன்பங்களின் தலையாயது ஆர்கஸம் என்கிற உச்சக்கட்டம்தான். சிலபல காரணங்களால் சிலருக்கு அந்த இன்பநிலை வாய்க்காமலே உறவு முடிவுக்கு வந்து விடுகிறது. அப்போது பெண் தான் உச்சக்கட்ட பரவசத்தை அடைந்தாற்போல அதற்கான சமிக்ஞைகளை (சத்தம், முனகல், முத்தம், கடி, இறுக்கம், தழுவல்) வெளிப்படுத்துவதுண்டு. அதேபோல சில ஆண்களும் `சூப்பரா இருந்துச்சு’ என்று சொல்லிவிடுவதுண்டு. இதைத்தான் போலி பரவசம் என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

இதற்கு காரணம் என்ன?

ஏமாற்றம்

உச்சக்கட்டத்தை உணராத நிலையில் அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் இருக்க சிலர் இப்படிச் செய்வதுண்டு. பெரும்பாலும் பெண்கள்.

இணை வருத்தப்படாமல் இருப்பதற்காக

சிலர் தங்கள் இணையைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இப்படிச் செய்வதுண்டு.

ஈகோ

சிலர் தங்கள் இணையின் ஈகோ பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த உச்சக்கட்ட நாடகத்தை நடத்துவதுண்டு.

ஆணாதிக்கம்

ஓர் ஆணாதிக்கவாதி இணையாக இருக்கும்போது அந்தப் பெண்ணுக்கு இதைத் தவிர வேறுவழி இருப்பதில்லை. இல்லையெனில், `வரலையா? அப்ப எவன்கூட படுத்தா உனக்கு சந்தோஷம் வரும்’ என்பது போன்ற கற்பனை செய்ய முடியாத கடுஞ்சொற்களை சர்வ சாதாரணமாகச் சந்திக்க நெரிடுமே.

போலிகளைத் தவிர்க்கவும்

காரணம் எதுவாக இருந்தாலும் நீங்கள் ஒருபோதும் புணர்ச்சியை போலியாகச் செய்யக் கூடாது என்றே பாலியல் – மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
போலி மகிழ்வை வெளிப்படுத்துவது என்பதை மேலோட்டமாகப் பார்த்தால் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம். ஆனால், போலி ஆர்கஸங்கள் படுக்கையறைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கக்கூடும். அதனால், பெண்கள் போலி பரவசத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதற்கு அறிவியல் காரணங்கள் உள்ளன.

உண்மையான உச்சக்கட்டத்தை அடைவது கடினமாகும்!

ஒரு புணர்ச்சியின்போது போலி பரவச தந்திரங்கள் வேலை செய்யாது. அதன் பிறகு, உண்மையான பெரிய ஆர்கஸத்தை அடைவது கடினமாகவே இருக்கும். உச்சக்கட்டத்தை அடைவதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அந்தச் செயல்பாட்டிலிருந்து மனரீதியாக விலகிவிடாமல் தொடர்ச்சியாக இயங்க வேண்டும். அதனால் இந்த விஷயத்திலும் போலிகளை நம்ப வேண்டாம்.

இணையிடமிருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்வீர்கள்!

ஒரு புணர்ச்சி என்பது உடல்ரீதியான செயல்பாடு மட்டுமே அல்ல. அது உங்கள் உறவைப் பற்றி மனதளவிலும் நன்றாக உணரவும் உதவும். நல்ல பரவச நிலையை அடைந்தவர்கள், அதன் பின்னர் தலையணைப் பேச்சின்போது தங்கள் இணையிடம் அதிகமாக மனம் திறந்தார்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெரிய ஆர்கஸத்தின் விளைவாக காதல் ஹார்மோன் ஆக்சிடோசின் தூண்டப்படுவதே காரணம். இது உங்கள் இணையுடன் நீடித்துப் பிணைந்திருக்க உதவுகிறது.

இணை உங்களை நம்ப முடியாதுபோல உணர்வார்!

அவர்கள் அதைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால், தங்கள் இணை அதைப் போலியாகச் செய்யும்போது அதை உணர முடியும். இது உங்கள் உறவில் நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும். உங்கள் இணை உங்களை மகிழ்ச்சிப்படுத்தவே விரும்புகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், நீங்கள் பாசாங்கு செய்ய வேண்டிய அவசியமில்லை. உள்ளது உள்ளபடியே இருக்கட்டுமே!

இணை வெளிப்படுத்துவதும் போலி பரவசமாக இருக்கலாம்!

இந்தப் புணர்ச்சிப் போலியானது பெரும்பாலும் பெண்கள் மட்டுமே செய்யும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், 25 சதவிகிதம் ஆண்களும் அதைப் போலியாக வெளிப்படுத்துவது அறியப்பட்டுள்ளது. ஆண்கள் புணர்ச்சிக்கு அழுத்தம் கொடுப்பதால், அந்த செக்ஸ் பாரம்பர்யமாக `முடிவடைகிறது’. அதாவது விந்து பாய்ச்சல் நிகழ்கிறது. ஆனால், இது அவரை முழுமையான பரவசத்துக்குத் தள்ளியிருக்க வேண்டிய அவசியமில்லை.

போலியாக வெளிப்படுத்துவதைவிட அப்போதைக்கு நிறுத்தி விடலாம்!

உடலுறவிலிருந்து உங்களுக்கு இன்பம் கிடைக்கவில்லை என்றால், அப்போதைக்கு அதை நிறுத்த விரும்புவதாகச் சொன்னாலும் பரவாயில்லை. அது உங்களுக்கு செக்ஸ் பற்றி பேசும் திறனை வழங்குகிறது, நீங்கள் விரும்புவதைப் பேசலாம். அன்றோ, மற்றொரு நாளோ ஒரு மகிழ்நிலையில் மீண்டும் கூடி, உண்மைப் பரவச நிலையை எட்டலாம். உங்கள் அன்புக்குரியவரிடம் எதையும் பேசலாம் என்கிற சூழலை உருவாக்கிவிட்டால் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நிச்சய வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

ஆண் மனம்

ஊடுருவல் செக்ஸ் என்பது பரவசத்தை ஏற்படுத்திவிடும். அதாவது, விந்து வெளிப்படுத்தப்பட்டு விட்டாலே, ஆணுக்கும் பெண்ணுக்கும் பரவசம் கிடைத்துவிடும் என்றே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், பரவசம் என்பது இந்த எண்ணத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது.

ஆண்கள் அந்தப் பாரம்பர்ய வழியில் உச்சக்கட்டத்தை அளிக்க முடியாவிட்டால் தங்கள் ஆண்மைத் தன்மை என்கிற கற்பிதத்துக்கே சவால் ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அதனால் பெண் தான் உச்சத்தை அடையவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டால், அதை ஓர் ஆணாகத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

என்ன செய்யலாம்?

புணர்ச்சியின்போது வெளிப்படும் ஒலிகளும் உணர்வுகளும் ஒருவருக்கொருவர் வெவ்வேறு விதமாகவே அனுபவிக்கப்படுகிறது. உங்கள் இணை போலி பரவசம் அடைந்தாரா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முயல வேண்டாம். அதற்குப் பதிலாக, உங்கள் இணை உண்மையான பரவசத்தை அடைவதற்கேற்ற சூழலை வளர்க்க நீங்கள் உதவ வேண்டும்.

வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடலை நடத்துங்கள்

இணையுடன் இதுபற்றிப் பேசலாம். ஆனால், அவர் உண்மையிலேயே பரவசம் அடைந்தாரா அல்லது கடந்த காலத்தில் போலியாக இதை வெளிப்படுத்தியுள்ளாரா, எத்தனை முறை என்றெல்லாம் அவர்களிடம் கேட்காதீர்கள்.

ஏனெனில், இது குற்றச்சாட்டு தொனியில் தோன்றும்போது உங்கள் இணையைத் தற்காப்பு நிலைக்குக் கொண்டு சென்று விடும். மகிழ்ச்சியை அதிகரிக்க எதிர்காலத்தில் நீங்கள் இருவரும் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியே பேச வேண்டும்.

இப்படியெல்லாம் பேசலாம்!

* உன்னை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். படுக்கையில் நீ குறிப்பாக விரும்பும் விஷயங்கள் என்னென்ன?

பாலியல் உறவின் நன்மைகள்பற்றி ஒரு கட்டுரை படித்தேன். நீ அதைச் சிறப்பாக அடைய உதவும் ஒரு குறிப்பிட்ட தொடுதல் அல்லது நுட்பம் உள்ளதா?

செக்ஸ் பற்றி மனம் திறந்து முன்முடிவு இல்லாமல் பேசுவது பாலியல் வாழ்வை சுகமாக்கும்!

What’s your Reaction?
+1
1
+1
2
+1
1
+1
2
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment